PGTRB ECONOMICS UNIT – 1
1. தேவை விதிக்கான முதலாவது விதிவிலக்கை கூறியவர் யார்
சர் ராபர்ட் கிஃப்பன்
2. கிஃப்பன் விளைவு எந்த நாட்டில் நடைபெற்ற ரொட்டி விலை ஏற்றத்தை கூறுகிறது
இங்கிலாந்து
3. தேவை விதிக்கான 2 வது விதிவிலக்கை கூறியவர் யார்
தொர்ஸ்டீன் வெப்லன்
4. ஆடம்பர நுகர்ச்சி என்ற தத்துவத்தை கூறியவர் யார்
தொர்ஸ்டீன் வெப்லன்
5. தேவை நிதிக்கான 2 வது தத்துவம் என்னவென்று அழைக்கப்படுகிறது
ஆடம்பர நுகர்ச்சி
6. தொர்ஸ்டீன் வெப்லன் எந்த நாட்டைச் சேர்ந்த பொருளியல் அறிஞர் ஆவார்
அமெரிக்கா
7. தேவை நெகிழ்ச்சி என்ற கருத்திற்கு முழு வடிவம் தந்தவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
8. விலை தேவை நெகிழ்ச்சி என்னவென்று அழைக்கப்படுகிறது
Price Elasticity of Demand
9. “சமுதாய மதிப்புடைய பொருட்களின் விலை கூடினால் செல்வந்தர்கள், சமுதாய மதிப்பு கருதி இவற்றை மிகுதியாக வாங்குவர்” என்ற கருத்தை கூறியவர் யார்
தொர்ஸ்டீன் வெப்லன்
10. பங்குச் சந்தைகளில் ___________ விதி பொருந்தாது
ஊக நோக்கு விளைவு விதி
11. விலை உயர்ந்த பொருட்கள் தரமான பொருட்களாக இருக்கும் என்ற அறியாமை காரணமாக மக்கள் அவற்றை அதிகமான அளவில் வாங்குவதால் __________ அதிகரிக்கும்
தேவை அதிகரிக்கும்
12. தேவை வளைகோடு இடப்புறம் அல்லது வலப்புறம் முழுவதுமாக நகர்வது ஆகும். இந்த கூற்று சரியா, தவறா ?
சரி
13. எந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் உணவில் ரொட்டி முதன்மையாக இருந்தது
19
14. விலை குறையும் போது பொதுவாக தேவை அதிகரிப்பதை என்னவென்று கூறுகிறோம்
தேவை விரிவு
15. தேவை விரிவு என்னவென்று அழைக்கப்படுகிறது
Extension of Demand
16. விலை மாறாமல் இருக்கின்ற பொழுது தேவை பெருகுவதை என்னவென்று அழைக்கிறோம்
தேவை பெருக்கம்
17. Increase in Demand என்று அழைக்கப்படுவது
தேவை பெருக்கம்
18. விலை அதிகமாகும் போது தேவை குறைவதை என்னவென்று அழைக்கிறோம்
தேவை சுருக்கம்
19. Contraction in Demand என்றால் என்ன
தேவை சுருக்கம்
20. விலை மாறாமல் இருக்கும்போது வேறு காரணங்களால் தேவை குறைவதை என்னவென்று அழைக்கிறோம்
தேவை குறைவு
21. தேவை குறைவு ஆங்கிலத்தில் என்னவென்று அழைக்கப்படுகிறது
Decrease in Demand
22. சாதாரண பேச்சு வழக்கில் அழிப்பு என்பது எதைக் குறிக்கிறது
விற்பனைக்கு தயாராக உள்ள பொருட்களின் அளவை குறிக்கிறது
23. Supply Schedule என்று அழைக்கப்படுவது
அளிப்பு பட்டியல்
24. தேவை குறைவதற்கான காரணம்
1. நுகர்வோரின் விருப்பம் குறைதல்
2. நுகர்வோரின் வருமானம் குறைதல்
3. பதில்களின் விலை குறைதல்
4. நிறைவு செய்யும் பண்டங்களின் விலை கூடுதல்
25. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் குறிப்பிட்ட பண்டத்தின் விலைகளுக்கும் அந்த விலைகளில் விற்கப்படும் உத்தேச அளவுகள் அடங்கிய அட்டவணை என்னவென்று அழைக்கப்படுகிறது
அளிப்பு பட்டியல்
26. தேவை அதிகரிப்பதற்கான காரணி
1. நுகர்வோரின் விருப்பம் கூடுதல்
2. நுகர்வோரின் வருமானம் உயர்தல்
3. பதில்களின் விலைகள் ஏறுதல்
4. நுகர்வு செய்யும் பண்டங்களின் விலைகள் குறைதல் செய்யும்
27. ஒரு பொருளுக்கும் அதன் விளக்கம் உள்ள நேரடியான தொடர்பை விளக்குவது
அளிப்பு விதி
28. விலை உயரும்போது அளிப்பு உயரும், விலை குறையும்போது அரிப்பு குறையும். இந்த கூற்று சரியா, தவறா ?
சரி
29. கட்ட அளிப்பு நெகழ்ச்சி சமன்பாடு
கட்ட அளிப்பு நெகழ்ச்சி = அளிப்பில் மாற்ற விகிதம் / விலையில் மாற்ற விகிதம்
30. அளிப்பு நெகழ்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள்
1. உற்பத்தி காரணிகளின் அளவைப் பொறுத்து அமையும்
தேவையை ஒட்டி அமையும்
2. மாற்று அங்காடிகள் இருப்பதை ஒட்டியும் ஒரு பொருளின் அளிப்பு மாறுபடும்
3. உற்பத்தி முறையை மாற்றுகின்ற காரணத்தாலும் அளிப்பு மாறுபடும்
31. “சமுதாய மதிப்புடைய பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் அவற்றின் தேவை அதிகரிக்கும்” என்ற கருத்தை கூறியவர் யார்
தொர்ஸ்டீன் வெப்லன்
32. அளிப்புப்பின் அளவையும், தேவையின் அளவையும் சமப்படுத்தும் விலை
சமநிலை விலை
33. Elasticity of Demand என்று அழைக்கப்படுவது
தேவை நெகிழ்ச்சி
34. ஒரு சார்ந்த மாறியில் ஏற்படும் ஒப்பு மாற்றத்திற்கும் உள்ள விகிதம் என்னவென்று அழைக்கப்படுகிறது
நெகிழ்ச்சி
35. “உயர்ந்த விலையில் விற்கும் பொருட்களை நுகர்வது உயர்ந்த அந்தஸ்து அளிக்கும் என்ற மனப்பான்மை மக்களிடையே பொதுவாக காணப்படுகிறது” என்ற கருத்தை கூறியவர் யார்
தொர்ஸ்டீன் வெப்லன்
36. ஆல்பர்ட் மார்ஷலுக்கு முன்பு தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை உருவாக்கியவர் யார்
1. கோர்னாட்
2. மில்
37. விலையின் ஒப்பு மாற்றத்திற்கும், வாங்கும் அளவின் ஒப்பு மாற்றத்திற்கும் உள்ள விகிதம்
விலை தேவை நெகிழ்ச்சி
38. தேவை நெகிழ்ச்சியின் வேறு பெயர்
விலை தேவை நெகிழ்ச்சி
39. விலையில் ஏற்படும் மாற்றங்கள் எந்த அளவிற்கு பொருளின் தேவையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது
தேவை நிகழ்ச்சி
40. “விலையின் ஒப்பு மாற்றத்திற்கும், வாங்கும் அளவின் ஒப்பு மாற்றத்திற்கும் உள்ள விகிதம் விலை தேவை நெகிழ்ச்சி ஆகும்” என்று கூறியவர் யார்
ஆல்பிரட் மார்ஷல்
41. ஒரு பொருளின் விலை மாற்றத்தின் காரணமாக தேவையின் அளவில் ஏற்படும் மாற்ற விகிதம் என்னவென்று அழைக்கப்படுகிறது
விலை தேவை நெகிழ்ச்சி
42. விலை தேவை நெகிழ்ச்சியின் சமன்பாடு
விலை தேவை நெகிழ்ச்சி = தேவை அளவில் மாற்ற விகிதம் / விலை அளவில் மாற்ற விகிதம்
43. Income Elasticity of Demand என்று அழைக்கப்படுவது
வருமான தேவை நெகிழ்ச்சி
44. நுகர்வோரின் வருமான மாற்றத்தால் தேவையில் ஏற்படும் மாற்ற அளவை என்னவென்று அழைக்கிறோம்
வருமான தேவை நெகிழ்ச்சி
45. வருமான தேவை நெகிழ்ச்சியின் சமன்பாடு
வருமான தேவை நெகழ்ச்சி = தேவை மாற்ற விகிதம் / வருமான மாற்ற விகிதம்
46. Cross Elasticity of Demand என்று அழைக்கப்படுவது
குறுக்கு தேவை நெகிழ்ச்சி
47. ஒரு பொருளின் விலையில் ஏற்படும் மாற்றம் & அதனோடு தொடர்புடைய மற்ற பொருளின் தேவையில் ஏற்படுகின்ற மாற்றத்தை என்னவென்று அழைக்கிறோம்
குறுக்கு தேவை நெகிழ்ச்சி
48. குறுக்கு தேவை நெகிழ்ச்சியின் சமன்பாடு
குறுக்கு தேவை நெகிழ்ச்சி = A என்ற பொருளின் தேவை அளவில் மாற்ற விகிதம் / B என்ற பொருளின் விலையில் ஏற்படும் மாற்ற விகிதம்
49. விலை தேவை நெகிழ்ச்சியின் வகைகள்
5
50. விலை மாற்ற விகிதத்தை விட, தேவை மாற்றம் மிகுதியாக இருந்தால் அது ___________ என்று அழைக்கப்படும்
ஒன்றுக்கும் மேற்பட்ட நெகிழ்ச்சி உள்ள தேவை