தமிழ் : வாணிதாசன்
1. புதுவை அருகே உள்ள வில்லியனூரில் 22.07.1915 ஆம் ஆண்டில் பிறந்தார்.
2. பெற்றோர்கள்
தந்தை – அரங்கத்திருக்காமூ
தாய் – துளசியம்மாள்
3. வாணிதாசனின் இயற்பெயர் – அரங்கசாமி என்கின்ற எத்திராசலு.
4. பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் வாணிதாசன்.
5. வாணிதாசன் அறிந்திருந்த மொழிகள் தமிழ், ருசியம் மற்றும் ஆங்கிலம்.
6. சாகித்திய அகாடமி வெளியிட்ட “தமிழ் கவிதை களஞ்சியம்” என்ற நூலில் வாணிதாசனின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
7. தென் மொழிகள் பதிப்பக வெளியீடு கழகம் வெளியிட்டுள்ள “புது தமிழ் கவிதை மலர்” என்ற நூலில் வாணிதாசனின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
8. வாணிதாசன் தமிழ் – பிரெஞ்சு அகரமுதலியை வெளியிட்டுள்ளார்.
9. பிரான்ஸ் நாட்டு குடியரசுத் தலைவர் வாணிதாசன்க்கு செவாலியர் விருது வழங்கி உள்ளார்.
10. வாணிதாசனின் பாடல்களில் இயற்கை புனைவு அதிகமாக காணப்படுவதால், இவர் தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று அழைக்கப்படுகிறார்.
11. வாணிதாசன் எழுதிய நூல் – எழிலோவியம்.
12. வாணிதாசன் கவிஞரேறு என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
13. வாணிதாசன் மறைந்த ஆண்டு 07.08.1974
தாராபாரதி
1. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள குவளை என்ற ஊரில் 26.02.1947 ஆம் ஆண்டுபிறந்தார்.
2. பெற்றோர்
தந்தை – துரைசாமி
தாய் – புஷ்பம் அம்மாள்
3. இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி நல்ல ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வென்றுள்ளார்.
4. தாராபாரதிக்கு ஒரு அண்ணனும் (மலர் மகன் எனப்படும் துரை சீனிவாசன்), தம்பியும் (துரை மாதவன்) உள்ளனர்.
5. துணைவியாரின் பெயர் – சந்தானலட்சுமி.
6. கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.
7. தமிழ் நாடு அரசு 2010 – 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.
8. இவருக்கு இரு புதல்வர்கள், விவேகாநந்தன் மற்றும் முனைவர் லோகுதுரை.
9. தாராபாரதி எழுதிய நூல்கள்
புதிய விடியல்கள்
இது எங்கள் கிழக்கு
திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
விரல்நுனி வெளிச்சங்கள்
பூமியைத் திறக்கும் பொன்சாவி
இன்னொரு சிகரம்
கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்
பண்ணைபுரம் தொடங்கி பக்கிங்காம் வரை
தாராபாரதி மறைந்த ஆண்டு 13.05.2000.